உதகையில் களைகட்டிய விநாயகர் சிலை விற்பனை

Author: Udhayakumar Raman
9 September 2021, 6:29 pm
Quick Share

நீலகிரி: நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் உதகையில் விநாயகர் சிலை விற்பனை களைகட்டியுள்ளது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நிலையில் இதற்காக விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தோற்றால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவில்லை இந்த வருடம் பொதுமக்கள் அவரவர் வீட்டிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் உதகை நகராட்சி மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது பொதுமக்கள் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Views: - 81

0

0