சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் காயம்

13 August 2020, 10:47 pm
Quick Share

விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள அய்யனார் காலனியில் தனியாருக்குச் சொந்தமான கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை 60 அறைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. அப்போது ஒரு அறையில் இருந்த கேப் வெடித்தாள்களை காயவைக்க அடுக்கும்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது இவ்விபத்தில் அந்த ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது அப்போது அந்த அறையில் பணியில் இருந்த ஆலையின் போர்மேன் ஜெயமுத்து (52) மற்றும் தொழிலாளி பாண்டியராஜன் (38) ஆகிய இருவரும் விபத்தில் காயம் அடைந்தனர்.

வெடிவிபத்து சத்தம் கேட்டதும் அருகில் இருந்த அறைகளில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஒடியதால் வேறு எந்த தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த இரண்டு தொழிலாளர்களும் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 8

0

0