கருப்பர் கூட்டம் யூடிப் சேனலை கண்டித்து பொது மக்கள் முருகனுக்கு சிறப்பு பூஜை…

9 August 2020, 7:42 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் கந்த சஷ்டியை தவறாக சித்தரித்த கருப்பர் கூட்டம் யூடிப் சேனலை கண்டித்து கந்தசஷ்டிபாடி பொது மக்கள் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

முருகனின் பெருமையை பறைசாற்றும் கந்தசஷ்டி பாடலை தவறாக சித்தரித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் பலவகைகளில் பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் தங்கள் கந்தசஷ்டி பாடலுக்கு தங்கள் ஆதரவையும் கருப்பர் கூட்டம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

அதேபோல் இன்று விருதுநகரில் பாஜக சார்பாக 35 இடங்களில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை எதிர்த்தும் கந்தசஷ்டி மேன்மையை போற்றும் வகையில், முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டி பாடல் பாடி சிறப்பு பூஜை நடத்தினர். இதில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்தும் கந்தசஷ்டி பாடலைப்பாடி பூஜை ஈடுபட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு கந்த சஷ்டி புத்தகம் வழங்கப்பட்டது.

Views: - 8

0

0