ஜவுளித் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

28 September 2020, 4:54 pm
Quick Share

விருதுநகர்: காரியாபட்டி அருகே தாமரைக்குளம் பகுதியில் ஜவுளித் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஜவுளி பூங்கா அமைய உள்ள இடத்தை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காரியாபட்டி அருகே தாமரைக்குளம்- பொட்டல்குளம் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இடத்தில் ஜவுளி பூங்கா அமைத்தால் அங்கு இருந்து வெளியேறும் சாயப்பட்டறை நீரால் தங்களது விவசாய நிலம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படையும் என கூறி அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஜவுளித் தொழில் பூங்கா அமையவுள்ள தாமரைக்குளம்,

பொட்டல்குளம் பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி இரு தினங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Views: - 6

0

0