புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை: 2 நாட்களாக உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல்
13 September 2020, 6:26 pmவிருதுநகர்: இராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி 2 நாட்களாக உறவினர்கள் மற்றும் கட்சியினர் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த ராஜாலிங்கம் நேற்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் உறவினர்கள் மற்றும் கட்சியினர் உடனடியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்றிலிருந்து 2நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய் அலுவலர் மங்கல சுப்பிரமணியன் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியுற்றது. இதனால் இராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரண்டு நாட்களாக முடக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பலகீ.மீ சுற்றி மாற்றுப்பாதையில் செல்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஏடிஎஸ்பி 2டிஎஸ்பிக்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.
0
0