லோடு ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு… ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி

31 January 2021, 8:42 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே சுப நிகழ்ச்சிக்கு சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள மேல் ஆமத்தூர் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை செம்பட்டிக்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக 15க்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்ற லோடு ஆட்டோ சிவகாசி சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆமத்தூர் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். விபத்தில் சிக்கிய மேல் ஆமத்தூர் சார்ந்த ராமர் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஐந்து நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0