பாலத்தின் மீது மினி வேன் மோதி கவிழ்ந்து விபத்து: 2 சிறுவர்கள் உட்பட மூன்று நபர்கள் படுகாயம்

29 September 2020, 8:21 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரையில் பாலத்தின் மீது மினி வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட மூன்று நபர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவக் கோட்டையை சேர்ந்தவர் செந்தில் வேல் முருகன். இவர் தேவகோட்டையில் சொந்தமாக மின் லோடு ஆட்டோ வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று வேலை நிமித்தமாக தன்னுடைய மகன்களான பால மணிகண்டன் மற்றும் திருக்குமார் ஆகியோருடன் நெல்லைக்கு தன்னுடைய மினி லோடு ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிச் சென்று உள்னார். பின்னர் தன்னுடைய மகன்களுடன் தன்னுடைய மினி லோடு ஆட்டோவில் செந்தில் வேல் முருகன் தேவகோட்டைக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் வரும் போது செந்தில் வேல் முருகன் ஒட்டி வந்த மினி லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையின் ஒரத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் ஆட்டோவில் இருந்த செந்தில் வேல் முருகன் மற்றும் அவரது இரண்டு மகன்களும் பலத்த காயம் அடைந்தனர். உடனே சாலையில் அந்த வழியாக சென்றவர்கள் சூலக்கரை காவல் நிலையத்திற்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை மற்றும் மகன்களை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை மற்றும் மகன்களுக்கு விருதுநகரில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருந்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 6

0

0