தீயில் எரிந்து சாம்பலாகிய கார்! உயிர் தப்பிய ஓட்டுநர்!!
25 August 2020, 2:13 pmவிருதுநகர் : ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீ பிடித்ததால் செய்வதறியாது திகைத்த உரிமையாளர் உடனே கீழே இறங்கியதால் உயிர் தப்பினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் இண்டிகா காரில் நாகனேந்தல் கிராமத்திலிருந்து காரியாபட்டி நோக்கி சென்ற போது தீடீரென காரின் இஞ்சின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த முத்துராஜ் காரை நிறுத்தி விட்டு இறங்கி உள்ளார்.இதை அடுத்து காரில் தீ பிடித்துள்ளது. உடனடியாக காரியாபட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் கார் முழுவதுமாக எறிந்து சேதமடைந்து விட்டது. விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து ஆவியூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
0
0