வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்கும் திட்டம் துவக்கம்…

4 September 2020, 3:57 pm
Quick Share

அரியலூர்: குழந்தைகளின் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்கும் திட்டத்தை அரியலூரில் அரசு கொறடா தொடங்கி வைத்தார்.

வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடுகள், எலும்பு வளர்ச்சி, வலுவான பற்கள், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வைட்டமின் ஏ முக்கியமானதாக உள்ளது. இதையொட்டி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பிறந்து 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் 57,165 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் 117 துணை சுகாதார நிலையங்கள், 774 அங்கன்வாடி மையங்களில் வழங்க திட்டமிடபட்டுள்ளது. எனவே 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் போட்டுகொள்ள பெற்றோர்களை கேட்டு கொள்ளபட்டுள்ளது.

Views: - 0

0

0