விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலைக்கு இணைப்பு பாலம் பணி டெண்டர் நிலையில் உள்ளது: தளவாய்சுந்தரம் பேட்டி

25 November 2020, 2:20 pm
Quick Share

கன்னியாகுமரி; கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே இணைப்புபாலம் அமைப்பது டெண்டர் நிலையில் உள்ளது என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறினார்.

கன்னியாகுமரியில் படகுசேவை துவக்கவிழா இன்று காலை பூம்புகார் படகுதுறையில் நடந்தது.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படகுசேவையினை டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது :- கொரோனா காலத்தில் கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட படகுசேவையை தொடங்க வேண்டும் என்று கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் மற்றும் ஓட்டல் சங்கநிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் வந்த தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து படகுசேவை உடனடியாக தொடங்க ப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 9 மணியளவில் படகுசேவை தொடங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். சுற்றுலா தொழிலை நம்பி இருக்கும் பலரின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடையும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே இணைப்புபாலம் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் அறிவித்தப்படி அதற்கான டெண்டர் விடப்பட்டது.முதலில் அந்த பணியை செய்ய எந்த ஒப்பந்தகாரரும் முன்வரவில்லை. இதனால் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.டெண்டரை எடுத்தவுடன் பணிஉடனடியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0