தொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது

Author: Udayaraman
27 July 2021, 7:55 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே தொழிலதிபரை கடத்தி அவரிடமிருந்து பிட்காயின்களை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது செய்தனர் .

மதுரையை அடுத்த விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த சரவணன். இவர் காயின் பஜார் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரான ராஜபாளையம் அருகிலுள்ள தேவர்குளம் சென்றுவிட்டு மீண்டும் மதுரைக்குச் கடந்த மாதம் சென்ற போது விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் அருகே அடையாளம் தெரியாத கும்பல் காரில் வந்து சரவணனை வழிமறித்து தாக்கி கத்தியை காட்டி மிரட்டி கடத்தியுள்ளனர். பின்னர் சரவணனை குற்றாலம் செல்லும் வழியில் ஒரு காட்டேஜில் அடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 30 பிட்காயின்களை மாற்றித் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். மேலும் சரவணன் வைத்திருந்த 1.40 லட்சம் டிரான் காயின் 13 கோடி எண்ணமுள்ள காயின் சரவணனிடமிருந்து அவர்களுக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

மேலும் சரவணன் ATM கார்டிலிருந்து ரூ.67000 பணமும் அவர் அணிந்திருந்த 4 பவுன் மதிப்புள்ள பிரேஸ்லெட் மற்றும் 3 பவுன் தங்க செயின் கை விரலில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் எடை கொண்ட மூன்று மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆமத்தூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு மூலகாரணமாக செயல்பட்ட சரவணனின் முன்னாள் நண்பரான ஆறுமுகச்சாமி மற்றும் கடத்தலுக்கு ஆட்களை ஏற்பாடு செய்த ராம் கனகசபாபதி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் கந்தசாமி தளவாய், மாடன் மைதீன், பிச்சை மற்றும் சக்திவேல் ஆகிய மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர்.

Views: - 136

0

0