பென்சன் பெறுவதை மறைத்து அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஓய்வுபெற்ற மின் ஊழியருக்கு விஏஓ எச்சரிக்கை

13 January 2021, 6:51 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று பென்சன் வாங்கி வரும் மாற்றுதிறனாளி ஒருவர்  மாற்று திரனாளிகளுக்கு அரசு தரப்பில் மாதந்தோறும்  வழங்கப்படும் 1500-ரூபாய் ஊக்கத்தை பெறுவதற்காக முதலமைச்சர் தனி பிரிவிற்கு மனு அளித்துள்ளார்.

அதில் தான் ஒரு மாற்றுதிறனாளி என்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதாகவும் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறிமுள்ளார். எனவே  அரசு  மாற்றுதிறனாளிக்கு வழங்கும் ரூ.1500 உதவித்தொகையை  வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பாக தூத்துக்குடி பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா மனுதாரார் வசிக்கும் பகுதிகளில் இவர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற தகுதியானவரா என்று விசாரணை நடத்தியதில்  திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதில் மாற்றுதிறனாளி மாத உதவித்தொகைக்கு முதல்வர் தனிபிரிவிற்கு மனு அளித்தவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும்  அவரது மனைவி ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் அளித்த மனுவில் அவர் ஒரு மாற்றுதிறனாளி என்பதை தவிர வேறும் ஒன்றும் உண்மை இல்லை என்பது தெரியவந்தை தொடர்ந்து அதிர்ந்துபோன கிராம நிர்வாக அலுவலர் பிரேம லதா உடனடியாக மனுதாரருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடம் எதுவும் தெரியாததுபோல் விசாரணை நடத்தினார்.

அப்போதும் அவர் உண்மையை மறைத்து தவறான தகவல்கள்  கூறியதால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா அவரது முழு பயடேட்டாவையும் அவரிடமே கூறி கடுமையாக எச்சரித்தார். கிராம நிர்வாக அதிகாரிக்கும்- ஓய்வூதியதாரருக்கும் இடையே நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதில், உண்மையை மறைத்து தவறான தகவல்கள் அளித்து உதவித்தொகை பெற முயன்ற ஓய்வூதியதாரருக்கு கடுமையான கண்டனங்களையும், தவறை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதாவுக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 2

0

0