வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

21 November 2020, 7:40 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களால் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அந்த மாதிரி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை உள்ளதா, திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமானால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி தருமபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் இன்று தருமபுரி நகரத்திலுள்ள நகராட்சி பெண்கள்உயர்நிலைபள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் சரியாக உள்ளதா, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்த்தல், இறந்த வாக்காளர் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கமணி சந்திரமோகன் வார்டு செயலாளர்கள் ரஹீம், ராஜா அன்பு உள்ளிட்டோர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

Views: - 0

0

0