சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

6 March 2021, 12:54 pm
Quick Share

கிருஷ்ணகிரி: சட்டமன்றத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் பிரிக்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது இதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன, நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பிரித்து வழங்கப்பட்டது, இதனடிப்படையில் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர் , ஊத்தங்கரை, ஓசூர், தளி , வேப்பனப்பள்ளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைய உள்ள 2,298 வாக்குப்பதிவு மையங்களுக்கு

2,715 கணட்ரோல் யூனிட் 2,715 பேலட் யூனிட் மற்றும் 2,944 விவிபேட் உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தலைமையகத்திற்கு பிரித்து வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரா பானு ரெட்டி அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறந்து வைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியை துவக்கி வைத்தார்.

இதில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் மாவட்ட கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முறையை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் வாக்களிக்கும் முறையை எடுத்துரைத்தார்.

Views: - 1

0

0