ரைஸ் மில்லில் 30 அடி பாய்லரில் விழுந்து கூலி தொழிலாளி பலி

27 October 2020, 6:55 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே ரைஸ் மில்லில் 30 அடி பாய்லரில் விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (வயது 47) திருமணமானர். இவர் அண்ணாமலை ரைஸ்மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அண்ணாமலை ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் விழுந்து அண்ணாமலை என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இது மில் நிர்வாகத்தினர் காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி 30 அடி ஆழத்தில் உள்ள பாய்லரில் இருந்து ஜீவானந்தத்தின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தை தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மகேந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 15

0

0