2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

Author: Udayaraman
2 October 2020, 3:24 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி சபரிமாலா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 7 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள் மட்டுமே தற்போது ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிவாய்ப்பு வழங்க கோரி தர்மபுரி சேலம் விழுப்புரம் திண்டுக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டதாரி இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Views: - 39

0

0