வீடு கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து: உடல் நசுங்கி ஒருவர் பலி
20 January 2021, 6:56 pmகிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மதிய வீடு கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஒருவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வெலகல்நத்தம் கிராமத்தில் புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைப் பெற்று வருகிறது. இதில் 10-க்கு மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் வேலை செய்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையயில் திடிரென சுவர் சரிந்து விழுந்ததில் கட்டட தொழிலாளி சுப்பிரமணி (53) சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி கணேஷ் பலத்த காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0
0