விவசாய பணி துவங்கும் முன் ஏரியில் உள்ள தண்ணீர் வீண்: விவசாயிகள் புகார்

24 November 2020, 10:24 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் விவசாய பணி துவங்கும் முன் ஏரியில் உள்ள தண்ணீர் வீணாக செல்வதாக, விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கிளாய் ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. ஏரி நீரை நம்பி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரை மற்றும் மதகு சீரமைக்கப்பட்டது. ஆனால், முறையாக பழுது பார்க்காமல், கண் துடைப்புக்காக சீரமைத்து உள்ளதால், மதகு வழியாக தண்ணீர் வீணாக செல்வதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஏரியில் ஓரளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், மதகு முறையாக சீரமைக்காததால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஆண்டுதோறும், பருவ மழையை ஒட்டி, கார்த்திகை மாதத்தில்,

இந்த பகுதி விவசாயிகள், விவசாய வேலையை துவங்குவர்.இந்த ஆண்டு, ஏரி எப்படியும் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் இருக்கும் தண்ணீரும் வீணாக செல்வதால், கவலை அளிக்கிறது மணல் மூட்டை கட்டி, பாதுகாப்பு ஏற்பாடு செய்தோம் அப்படி இருந்தும், தண்ணீர் வெளியேறுகிறது. அதன் நீர்வரத்து கால்வாயும் இந்த ஆண்டு துார் வாரப்படவில்லை. அதனால், மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தாலும், தண்ணீர் அதிகம் வர வாய்ப்பில்லை. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக செல்கிறது. மதகை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 0

0

0