வைகையில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு : அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் திறந்து வைத்தனர்!!

Author: kavin kumar
11 August 2021, 1:32 pm
Vaigai Water Release- Updatenews360
Quick Share

தேனி : வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தண்ணீர் திறந்து விட்டனர்.

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 85,503 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பகுதியான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1130 கனஅடி வீதம் 11-8 – 2021முதல் 120-நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன், மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.மகாராஜன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ் செல்வன், மாநில விவசாய அணி தலைவர் எல்.மூக்கையா, வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுகுமாறன், பெரியாறு பிரதான கோட்ட செயற்பொறியாளர் பவளக் கண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Views: - 205

0

0