டெல்லியில் தற்கொலை போராட்டத்தை நடத்த எங்களை தயார் செய்து வருகிறோம்: அய்யாக்கண்ணு பரபரப்பு பேட்டி

29 January 2021, 8:09 pm
Quick Share

திருச்சி: விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் தற்கொலை போராட்டத்தை நடத்த தங்களை தயார் செய்து வருவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு பேசியதாவது:- விவசாயிகள் தொடர்ந்து போராட்டக்களத்தில் நிற்கும் நிலையில் டிராக்டர் பேரணியில் டெல்லி போலீஸ் நடந்துகொண்ட அராஜகமான செயலை கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்களும் பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அகில இந்திய கிசான் சங்கர்சல் கோ ஆடினேட் கமிட்டியில் டெல்லி காந்தி அமைதி கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில்
25அமைப்பாளர்களை இந்த கமிட்டியில் சேர்த்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவாக ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. இதில் வி.எம். சிங் என்ற சட்டமன்ற உறுப்பினரும் அமைப்பாளராக இருக்கிறார். 25அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவர் 3 வேளாண் சட்டத்தை திரும்பப்பெற நடக்கும் போராட்டத்தில் இந்த கமிட்டி கலந்து கொள்ளாது என்று அறிவித்து இருப்பதை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வன்மையாக கண்டித்துள்ளார்.

25அமைப்பாளர்கள் அடங்கிய இந்த கூட்டு நடவடிக்கை குழுவில் தன்னிச்சையாக தன்னுடைய அறிக்கை கொடுத்து யாரிடமும் எந்தவித கலந்து ஆலோசனை செய்யாமல் இப்படிப்பட்ட ஒரு தகவலை கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. ஒருபோதும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து விவசாயிகளுடைய போராட்டம் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மேலும் மத்திய அரசை கண்டித்து நாங்கள் விவசாயிகள் ஒன்றுசேர்ந்து திருச்சியிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு தற்கொலை போராட்டத்தை நடத்த நாங்கள் எங்களை தயார் செய்து வருகிறோம். விரைவில் டெல்லியில் நாங்கள் தற்கொலை போராட்டத்தை நடத்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0