முத்தரையர் சிலையை அகற்ற நினைத்தால் ஆயிரம் உயிர் பலி கொடுக்க தயாராக உள்ளோம்: மாநில ஒருங்கிணைப்பாளர் பகிரங்க எச்சரிக்கை

Author: kavin kumar
3 October 2021, 6:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் உள்ள முத்தரையர் சிலையை அகற்ற நினைத்தால் ஆயிரம் உயிர் பலி கொடுக்க தயாராக உள்ளதாக மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சிக்னலில் அமைந்துள்ள முத்திரையைர் சிலைக்கு காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்து அதில்14 வகையான மூலிகை கொண்டும், கங்கை நீர் கொண்டு காவிரி ஆற்றில் இருந்து பேரணியாக வந்து முத்தரையர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், முத்தரையர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த அபிஷேகம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையத்தில் இருந்து கோர்ட் ரவுண்டானா வரை உயர்மட்ட பாலம் வருவதாகக் கூறுகின்றன. பாலம் வந்தாள் முத்தரையர் சிலை அங்கேயே இருக்க வேண்டும். அதை அகற்ற முயன்றால் ஆயிரம் உயிர்கள் பலியிட தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்திக்க தயாராக இருக்கிறோம். திருக்காட்டுப்பள்ளி அடுத்த நேமம் கிராமத்தில் 1500 வருஷத்துக்கு முன்பு மிகப் பெரிய கோட்டை இருந்துள்ளது. அதில் 1300 சிவலிங்கங்களை மன்னர் வழிபட்டது ஆதாரப்பூர்வமாக தொிய வந்துள்ளது. கீழடியை விட நேமத்தில் மிக பெரிய தமிழக அடையாளம் மறைந்துள்ளது. 1,300 வருடம் ஆண்ட பெரும்பிடுகு மன்னரை நினைவு கூறும் வகையில், 130 அடி சிலையை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் என என தெரிவித்தார்.

Views: - 184

0

0