கூட்டணி குறித்து காங் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு

24 January 2021, 7:14 pm
Quick Share

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது எனவும், கூட்டணி குறித்து காங் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக கட்சி நிர்வாகிகளிடையே பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ராகுல்காந்தி 3 முறை வருவதாக தெரிவித்துள்ளதாகவும், மேலும் தற்போது வரை திமுக கூட்டணி தொடர்வதாகவும் தெரிவித்த அவர்,

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஒரு டுபாகூர்(பாஜக) கட்சி உள்ளது என்றும் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்காளை தடுத்து நிறுத்துவதை கேட்காமல் காங் தேர்தல் அறிக்கையை பாஜகவினர் எரிப்பதாக குற்றம்சாட்டிய அவர், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்றார்.

மேலும் பிரிவினை மற்றும் மதவாத கட்சி என்பதால் பாஜகவை புதுச்சேரியில் இருந்து விரட்டி அடிப்போம் என்றார். வரும் 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நலத்திட்டங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்துவது கிராமப்புற மக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. எனவே புதுச்சேரியில் கிரண்பேடி இருந்தால் நல்லது என்றும் அதனை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றார். நடைபெற உள்ள தேர்தலில் மக்கள் பாஜகவை புறக்கணிப்பார்கள், அவர்களோடு கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் ஆவோசமாக பேசினார்.

Views: - 0

0

0