சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: 6 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்…

Author: Udhayakumar Raman
4 September 2021, 6:56 pm
Quick Share

மயிலாடுதுறை: சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தரங்கம்பாடியில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை நாகை புதுக்கோட்டை கடலூர் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 63 மீனவ கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி மீனவ பிரதிநிதிகள் தலைமையில் நாகை அக்கறைபேட்டை கிராம நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி மீனவ கிராம நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் கூட்டத்தின் முடிவில் சுருக்கு மடி வலை மற்றும் இரட்டை மடி வலை அதிவேக என்ஜின்களை பயன் படுத்தி மீன் பிடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை சென்னை சென்று தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து சுருக்கு மடி வலைக்கு எதிரான ஒவ்வொரு கிராமங்களின் லெட்டர் பேடுகளில் மனு அளிக்க உள்ளோம். இவற்றைத் தொடர்ந்து நாகையில் மாநில அளவிலான சுருக்குமடி வலைக்கு எதிரான கிராம நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை முன்னிட்டு ஒரு ADSP, 4 DSP தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 83

0

0