ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை காப்பாற்ற பாடுபடுவோம்: பசுமை இயக்க தலைவர் அதிரடி பேட்டி

13 July 2021, 1:53 pm
Quick Share

துத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற பாடுபடுவோம் என பசுமை இயக்க தலைவர் சிவக்குமார் கூறியுள்ளார்.

பசுமை இயக்கம் சார்பாக மறைந்த அப்துல்கலாம் உயிர்தெழுகிறார் என கலந்துரையாடல் நிகழ்வு துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பசுமை இயக்க தலைவர் A.சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கையில், பசுமை இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களையும் மரம் நட்டு வளர்க்கும் பசுமைக்காடுகள் உள்ளடங்கிய இயற்கை பாதுகாப்பு திட்டங்களையும், மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, மழை தரக்கூடிய மரங்களை நட்டு, இழந்து வரும் இயற்கையை மீட்டேடுக்க நாங்கள் பல திட்டங்களை இயக்கி வருகின்றோம்.

இதற்காக பசுமை இயக்கம், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 ஆயிரம் தன்னார்வல உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அழிந்து வரும் பசுமையை காப்பாற்றுவது. இதன் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற பாடுபடுவது. வேலையில்லாத படித்த பட்டதாரிகளுக்கு பசுமை பாதுகாப்பு படையில் இருக்க இடம், உண்ண உணவு, மற்றும் 3 மாத தாவரவியல் பயிற்சிகள் கொடுத்து இந்திய அரசின் சான்றிதழை கொடுத்து வேலை செய்ய எண்ணினாள் ரூபாய் 7500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது. விவசாயம் செய்ய முடியாத சூழலில் இருக்கின்ற விவசாயிகளிடம் நிலத்தை குத்தகைக்கு பெற்று அழிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுப்பது.

இந்தத் திட்டத்தின் மூலம் மாதாந்திர வருமானத்தை விவசாயிகள் பெற்று தற்கொலைக்கு முயற்சிக்கின்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என கூறிய அவர், நமது கலாச்சாரமும் பண்பாடும் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்து உருவானது என்பது அனைவரும் உணர்ந்ததே. கலை கலாச்சாரம் பல கலைகளை ஒருங்கிணைந்து நமக்கென்று ஒரு அடையாளத்தை பதித்த தமிழர்கள் இன்று நம் கண்முன்னே பல கடைகள் நலிவடைந்து அழிந்து வருவதை பார்க்க முடிகிறது. அப்படி இருக்கும் தருணத்தில் மிஞ்சியிருக்கும் கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் கொடுக்கவேண்டிய பொறுப்பினை நமது பசுமை இயக்கம் எடுத்து செல்ல முற்படுகிறோம் என கூறினார்.

Views: - 24

0

0