கொடைக்கானலில் ஞாயிற்றுகிழமை வாரச்சந்தை திறப்பு

By: Udayaraman
11 October 2020, 6:47 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஞாயிற்றுகிழமை வாரச்சந்தை திறக்கப்பட்டதையடுத்து சமூக இடைவெளியுடன் வியாபரிகள் விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. இதில் ஊரக,நகர் பகுதிகளில் வாரசந்தை அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 7 மாதங்களுக்கு பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் செயல்படும் ஞாயிற்றுகிழமை வாரசந்தை இன்று இயங்கியது. வாரசந்தையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக வாரசந்தையில் 100 கடைகளுக்கு மட்டும் அனுமதி என சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருந்த நிலையில்,

100 கடைகள் மட்டும் சமூக இடைவெளியுடன் கடைகள் அமைத்து வியாபரிகள் விற்பனை செய்து வருகின்றனர். சந்தைக்கு வரும் மக்கள் கட்டயமாக முகக்கவசம் அணியவேண்டும் எனவும், கிருமி நாசினி உபயோகித்த பிறகு அனுமதிக்க படுவார்கள்  என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். மேலும் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Views: - 43

0

0