டாஸ்மாக் கடைகளில் காவல் மேற்கு இணை ஆணையாளர் ஆய்வு

By: Udayaraman
14 June 2021, 1:56 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட 60 மதுபான கடைகள் , அரசு விதித்த விதிமுறைகளுடன் திறக்கப்பட்டதா என காவல் மேற்கு இணை ஆணையாளர் ராஜேஸ்வரி ஆய்வுகளை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வந்த காரணத்தினால் , டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. தற்போது , கொரோனா கட்டுக்குள் வந்ததால் மீண்டும் இன்று முதல் மதுபான கடைகளை திறக்க மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் , இன்று சென்னை உட்பட 27 மாவட்டங்களில் காலை 10 மணியளவில் மதுபான கடைகள் காவல் துறை பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. இந்த வரிசையில் , புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மதுபான கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முக கவசத்துடன் மது விற்பனை செய்யப்படுகிறது என காவல் மேற்கு இணை ஆணையாளர் ராஜேஸ்வரி மற்றும் துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணா நேரில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

Views: - 103

0

0