கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி: 14 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் மனைவி சரண்

Author: kavin kumar
11 August 2021, 2:58 pm
Quick Share

காஞ்சிபுரம்: 14 வயதில் மகன் இருப்பதை மறந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு தாலி கட்டிய கணவனை கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்த மனைவி 14 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் சரணடைந்தார் .

தமிழகத்திலேயே அதிக தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் திகழ்கின்றது. அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் , ஒரகடம் ,படப்பை, மணிமங்கலம், இருங்காட்டுகோட்டை போன்ற பகுதிகளில்தான் ஆயிரக்கணக்கான பன்னாட்டு மட்டும் உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ,உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் , கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களிலிருந்து இங்கு வேலை செய்கின்றார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, கள்ளக்காதல், தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து கொண்டு வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமலை நகர் பகுதியில் புதியதாக வீடு கட்டி கடந்த 7ஆண்டுகளாக அதில் தங்கவேல் (44) விமாலாராணி( 37)தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு ஹரிஷ் ராகவ் என்ற 14 வயது மகன் உள்ளார். தங்கவேல் ஓரகடம் பகுதியிலுள்ள வால்வோ என்ற தனியார் தொழிற்சாலையில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது மனைவி விமலா ராணி மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

மீண்டும் கடந்த 1ம் தேதி தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சந்தேகமடைந்தார். தங்கவேலுவின் தந்தை சோமமங்கலம் காவல் நிலையத்தில் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகி, தன் கணவரை கடந்த 28ம்தேதி மதியம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருவாமனையால் அவரது கழுத்தில் 2 முறை வெட்டியதால் சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறினார்

இரவு 10 மணி வரை பிரேதத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளகாதலனான சேலத்தை சேர்ந்த ராஜா என்பவரை வரவைத்து அருகில் உள்ள ஏரியில் பிரேதத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்படி பிரேதத்தை இன்று அல்லது நாளை ஏரியில் இருந்து எடுக்க உள்ளனர், விமலா ராணியை கைது செய்து கள்ளக்காதலன் ராஜாவை மணிமங்கலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தங்கவேலின் பூர்வீகம் சேலம் மாவட்டம் தங்களுக்கும் விமலா தணிக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றது. விமலா ராணியை ஏற்கனவே சேலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தங்கவேலு விமலா ராணி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனஞ்சேரி பகுதிக்கு வந்து புதியதாக வீடு கட்டிக்கொண்டு அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள். 14 வயது மகன் அருகே உள்ள ஆங்கிலப் பள்ளியில் படித்து வருகின்றார். அழகான கணவன் ,அழகான மகன், கை நிறைய சம்பளம் இவற்றையெல்லாம் மறந்த விமலா ராணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு காமக்களியாட்டத்தில் விளையாடி தாலி கட்டிய கணவனையே வெட்டி கொன்ற செயல் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Views: - 289

0

0