காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

3 November 2020, 3:20 pm
Quick Share

நீலகிரி: கூடலூர் அருகே பாலசாமி என்பவர் காட்டு யானை தாக்கி நேற்று உயிரிழந்த நபரின் உடலை இன்று அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி குயின்ட் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் கூடலூர் நகராட்சியில் பிட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் பணி முடிந்து இன்னும் வீட்டிற்கு வராத காரணத்தால் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை யானை தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேதத்தை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “அவ்வப்போது அரசு பேருந்துகள் இந்த பகுதிக்கு சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 15

0

0