குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானை:பொதும‌க்க‌ள் அச்சம்….

Author: kavin kumar
14 October 2021, 11:56 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கான‌ல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானை உலா வருதால் பொதும‌க்க‌ள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வன விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.இந்த நிலையில் கொடைக்கானல் கிராம பகுதியில் மட்டும் நகர்ப்பகுதிகளில் உள்ள வரும் வன விலங்குகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வந்தனர். வன விலங்குகளான காட்டெருமை ,மான், பன்றி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில்குடியிருப்பு பகுதிக்கு அருகே வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை உலா வருவது தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Views: - 200

0

0