வனவிலங்கு பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Author: kavin kumar3 October 2021, 5:29 pm
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டத்தில் வன உயிரின வார விழா அக்டோபர் 2ஆம் தேதி முதல் 8தேதி வரை நடைபெறக்கூடிய இந்த வார விழா நிகழ்ச்சியில், வன விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது என்று மக்களுக்கு எடுத்துக்கூறும் விதத்தில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துவங்கியது. திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் வனத்துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் விசாகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் பிரபு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் சைக்கிள் பேரணியில் மாணவர்களுடன் பங்கேற்றனர். பேரணியில் காடு காப்போம் நாடு காப்போம், திணை காப்பது நம் கடமை, காட்டினை அழிப்பது மிக மடமை ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மற்றும் வனக்காவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
0
0