சாலையோரத்தில் உலா வரும் வன விலங்குகள்

14 May 2021, 10:58 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வன விலங்குகள் சாலையோரம் உள்ள மரங்கள் மற்றும் சாலையோரத்தில் உலா வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. காட்டுமாடு, சிறுத்தை, யானை பல்வேறு வகையான குரங்குகள் மான் போன்ற வனவிலங்குகள் உள்ளன. ஏப்ரல் மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் பகுதிக்கு அதிகம் வருவதால் வன விலங்குகள் சாலையோரங்களில் வருவது கிடையாது. தற்போது 144 தடை உத்தரவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் கொடைக்கானலுக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்ற பகுதிகளுக்கு வராத காரணத்தால் வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையிலும், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையிலும், சிங்கவால் குரங்குகள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் சாலையோரங்களிலும் சாலைகளிலும் உலா வருகின்றன. இதுவரையில் சிங்கவால் குரங்குகள் சாலை பகுதியில் வருவது கிடையாது. ஆனால் தற்போது சுற்றுலா பயணிகள் வராத காரணத்தால் அதிக அளவில் சிங்கவால் குரங்குகள் உலா வருகின்றன.

Views: - 37

0

0