புதுச்சேரியில் காற்றுடன் கூடிய பலத்த மழை: பெருக்கெடுத்து ஒடிய மழை நீர்

Author: kavin kumar
10 October 2021, 7:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாலை முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததை அடுத்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், லேசானது முதல் கன மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை அறிவுத்திருந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் நகர பகுதிகளான உப்பளம், ராஜ்பவன், கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை , நெல்லிதோப்பு உள்ளிட்ட இடங்களிலும் அதே போல் கிராம பகுதிகளான மடுகரை,

திருக்கனூர், கன்னியகோயில், காலாபட்டு, சேதராபட்டு உள்ளிட்ட இடங்களிலும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது, மழை பெய்ததின் காரணமாக புதுச்சேரியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாலையில் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது, அதே போல் சில இடங்களில் மர கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன, தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுபணிதுறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டனர், திடிர் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, மேலும் மழையினால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Views: - 227

0

0