மேற்கு வங்கத்தில் பெண் பாஜக பிரமுகர் கைது : காரில் கொக்கைன் போதை பொருள் பறிமுதல்!!

20 February 2021, 12:16 pm
Bjp Executive Arrest- Updatenews360
Quick Share

மேற்கு வங்கம் : போதை மருந்து பயன்படுத்தியதற்காக பாஜக பெண் இளைஞரணி பொதுசெயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக பமேலா கோஸ்வாமி கொக்கைன் போதை பொருள் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

லட்சம் மதிப்புடைய கொக்கைகனை அவரது மணி பர்சிலும் மற்றும் கார் சீட்டுக்கு கீழும் பறிமுதல் செய்யப்பட்டனர். அவர் பயணித்த காரில் இருந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பாஜக பெண் இளைஞரணி செயலாளர் மீது சந்தேகமடைந்து அவரை பின் தொடர்ந்து வந்ததாக மேற்கு வங்க போலீசார் கூறியுள்ளனர். ஆனால் இது திட்டமிட்ட சதி என்று பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பாஜக வில் இணையும் முன்பு பமேலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாகவும், டிவி சீரியல் நடிகையாகவும் இருந்துள்ளார். நியூ அலிப்பூரில் வைத்து இருவரையும் கைது செய்த போலீசார், கூச்சலிட்டபடி போலீஸ் வாகனத்தில் சென்றார்.

Views: - 0

0

0