மூதாட்டி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை: பெற்ற மகன்கள் கவனிக்காததால் தற்கொலையா…???

24 November 2020, 4:46 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் 57 வயது மூதாட்டி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெற்ற மகன்கள் கவனிக்காததால் தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்டிஆர் நகரைச் சேர்ந்த மகாலட்சுமி வயது 57 இவருக்கு வீரக்குமார் மற்றும் ராஜேந்திரன் என 2 மகன்கள் உள்ளனர். மகாலட்சுமியின் கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆன நிலையில், மகாலட்சுமி இரு மகன்களில் வீட்டில் ஒரு ஒரு மாதம் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜோதிபுரத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்க்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகாலட்சுமி வந்து உள்ளார். தனியாக வசித்து வந்துள்ளார் மன அழுத்தத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோதி புறத்தில் தங்கையின் வீட்டிற்க்கு அருகில் இருந்த காலி இடத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நகர் காவல் நிலைத்திருக்கும் தீயணைப்புத்துறை இருக்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்து அங்கு காவல்த்துறையினர் வரும் முன்பே மகாலட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நகர் போலீசார் தற்கொலைக்கான காரணம் என்ன பெற்ற மகன்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0