பெண் தூக்கிட்டு தற்கொலை; கோட்டாட்சியர் விசாரணை

Author: Udhayakumar Raman
29 November 2021, 5:43 pm
Quick Share

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு பரும்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் அருகே மேலமுடிமண் தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி அனு (26).இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் ஆகி இதுவரை குழந்தைகள் இல்லை.மேலும் கடந்த வாரம் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள தெற்கு பரும்பூரில் தன்னுடைய அம்மாவின் வீட்டில் கடந்த ஒரு வார காலமாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் வீட்டின் தொட்டில் கம்பியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட அனுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி சுமார் ஆறு வருடங்களே ஆன நிலையில் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் விசாரணை செய்து வருகிறார்.

Views: - 49

0

0