தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியில் இருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு
Author: kavin kumar16 August 2021, 7:45 pm
தருமபுரி: பாலக்கோடு அடுத்த பேவுஹள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்து உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்தபேவுஹள்ளி பஞசாயத்திற்குட்பட்ட பகுதியில் காலை முதல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனிரத்தனம் என்கிற பெண்ணை அங்கு புதரில் இருந்த நல்லபாம்பு கடித்துள்ளது. இதில் மயங்கி விழுந்த முனிரத்தினத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஹள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0