பெண்ணை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கு: 5 பேர் கைது

19 November 2020, 11:24 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பெண்ணை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் அய்யாப்பா நகர் பகுதியில் ராம்குமார் ஜெயகிருபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராம்குமார் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி இரவு ஜெயகிருபா வீட்டில் தனியாக இருந்தபோது இருசக்கர வாகனத்தில் அந்த நான்கு பேர் ஜெயா கிருபாவை கட்டிப்போட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். நடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நகர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து சிசிடிவி பதிவுகளை கொண்டு அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் இன்று அருப்புக்கோட்டை அருகில் உள்ள கோவிலங்குளம் பகுதியில் காவல்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு காரில் வந்த 5 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனார். அவர்களிடம் 30 சவரன் நகை இருப்பது தெரிய வந்தது விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முணராக பேசியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த ஒரு பெண்
ஜெயகிருபாவின் நெருங்கி தோழியான முத்துச்செல்வி என்பதும் தொடர் விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. முத்துச்செல்வி ஜெயகிருபாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அருகில் மற்றொரு தெருவிற்க்கு குடிபெயர்ந்து உள்ளார். முத்துச்செல்விக்கும் மதுரை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஹரிஹரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் விளைவாக ஹரிஹரன் முத்துச்செல்வியிடம் தன் தாயின் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை ஆனால் தனக்கு தெரிந்த பெண்ணிடம் பணம் நகைகள் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதையடுத்து முத்துச்செல்வி அளித்த தகவலின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த ஹரிஹரன் அவரது நண்பர்களான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கணேஷ்குமார், அருண்பாண்டியன், சோலைசாமி ஆகியோருடன் இணைந்து கடந்த 10ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த ஜெயகிருபாவை கட்டிப்போட்டு அவரிடம் இருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்து தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் மற்றும் சம்பவத்திற்கு காரணமாக இருந்த முத்துச்செல்வி உட்பட 5 நபர்களையும் கைது செய்ய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0