கோவில் வளாகத்தில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

21 June 2021, 6:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் கோவில் வளாகத்தில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் 4 மணி சந்திப்பு அருகே உள்ள பாலசுப்பிரமணியன் கோவில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிக்காக மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கோவிலின் அருகில் உணவகம் வைத்திருந்த பெண் ஒருவர் வந்து பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைடுத்து அவர் திருக்கோவிலூர் காவல் நிலைத்திற்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த டிஎஸ்பி (பொறுப்பு) திருமேனி மற்றும் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையிலான காவலர்கள் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலையா ? தற்காலையா ? போலீசார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 131

0

0