பெண்களை ஆபாசமாக பேசிய ஊராட்சி செயலாளரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
16 September 2021, 3:56 pm
Quick Share

திண்டுக்கல்: 100 நாள் வேலை பணியாளர்களை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் தருமத்துப்பட்டி ஊராட்சி செயலாளர் பேசியதை கண்டித்து 50க்கும் பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தினமும் வேலை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பணிக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் வந்துள்ளனர். இந்நிலையில் ஊராட்சி செயலாளர் இன்னாசி வேலை செய்து கொண்டிருந்தான் நபர்களிடம் உங்களின் எண்ணிக்கையோடு பத்து பேரை அதிகமாக சேர்த்து எழுத வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் வராதவர்களின் பெயர்களை சேர்க்க முடியாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவரிடம் பேசிய ஊராட்சி செயலாளர் இன்னாசி பெண்களை தரக்குறைவாகவும் ஆபாசமான வார்த்தைகளை பேசியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த பெண்கள் வராத நபர்களுக்கு பெயரைச் சொற்கள் சொன்னதும் இல்லாமல் ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஊராட்சி செயலாளர் மீது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செம்பட்டி ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தர்மத்துப்பட்டி அருகே தற்போது சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதில் பேசிய பெண்கள் வேலைக்கு வராத நபர்களை ஊராட்சி செயலாளர் பணிக்கு வந்ததாக அட்டை போட செல்கிறார். அதேபோல் இவர் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு உள்ளது. தர்மத்துப்பட்டி ஊராட்சியில் சில வருடங்களுக்கு முன்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்து விசாரணையும் நடத்தப்பட்டது.

அதேபோல் பன்றிமலை ஊராட்சியில் செயலாளராக இருந்தபோது அங்கு ஊழல் செய்ததால் தற்போது தர்மத்துப்பட்டி ஊராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் வேலைக்கு வராத நபர்களின் பெயரை சேர்க்கை சொல்லியும் மிரட்டியதால் நாங்கள் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம், உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரெட்டியார்சத்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Views: - 138

0

0