கட்டுமான பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து பலி: கட்டுமான ஒப்பந்ததாரர், மேற்பார்வையாளர் மீது வழக்குப் பதிவு

22 January 2021, 10:14 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் நேற்று கட்டுமான தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான ஒப்பந்ததாரர், மேற்பார்வையாளர் மீது சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவ கல்லூரியில் கட்டுமான பணியை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் கூரைகுண்டுவைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை எடுத்த போது அங்கிருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சூலக்கரை காவல் நிலையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் முருகன் உடலை வாங்க மறுத்து அவர் இறப்பிற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்க கோரி, நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கூலித்தொழிலாளி கீழே விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரும் ராங்க் புரோஜெக்ட்,

தனியார் நிறுவன இயக்குநருமான ராஜசேகரன், மேற்பார்வையாளர் பாண்டியராஜன் ஆகியோர் மீது சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், நேற்று மாலை முன் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட முருகனின் உறவினர்கள் மீதும் மற்றும் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் 50 பேர் மீதும் சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

Views: - 0

0

0