சாலையில் கிடந்த தங்க நகையை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி: பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

Author: kavin kumar
12 August 2021, 7:31 pm
Quick Share

வேலூர்: சாலையில் கிடந்த இரண்டு சவரன் தங்க நகையை வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்த தொழிலாளிக்கு எஸ்.பி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

வேலூர் புதுஅக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்.இவர் தனியார் பள்ளியில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட களுக்கு முன் மாசிலாமணி தெருவில் சென்று கொண்டிருந்த போது சாலையில் 2 சவரன் தங்க நகை ( பிரேஸ்லெட்டை ) இருந்துள்ளதை கண்ட சரவணன் மற்றும் கோபி அதை எடுத்து அருகில் யாராவது நகை தொலைத்து தேடுகிறார்களா என்று பார்த்துள்ளார்.என்னருகில் கடை வைத்திருப்பவன் இடம் யாராவது இப்பகுதியில் நகை தவறவிட்டதாகவ தேடிவந்தால் தன்னிடம் நகை இருப்பதாகவும் தன்னை அனுகுமாறும் கூறிச் சென்றுள்ளார்.இன்று வரை யாரும் வந்து நகையை கேட்காததால், இன்று வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு வந்து காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் நகையை ஒப்படைத்தார். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மையான சரவணனை எஸ்.பி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Views: - 564

0

0