திரையரங்குக்கு பெயிண்டிங் வேலை செய்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

Author: Udhayakumar Raman
26 June 2021, 2:55 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் வணிக வளாகம் மற்றும் சொகுசு திரையரங்குக்கு பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் சாலையில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த வணிக வளாகம் அருகிலேயே மின்சாரக் கம்பிகள் செல்கிறது. வணிக வளாகம் பணி விரைவில் முடிப்பதற்கு ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை விரைவில் வேலை முடிக்கச் சொல்லி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சார்ந்த சங்கர் என்பவர் பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறார். வணிக வளாகம் அருகே செல்லக்கூடிய மின்சார கம்பி இருப்பதை பார்க்காமல் வேலையை முடிப்பதற்காக வேலை செய்து வந்துள்ளார். அங்கு வழியில் போடப்பட்டிருந்த மிகவும் உயரமான கம்பியை அப்புறப்படுத்தும் போது எதிர்பாராமல் மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அங்கு பணிபுரிந்த சக தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அவசரஅவசரமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சங்கர் இறந்த செய்தியை அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். சங்கரின் உறவினர்கள் வீட்டிற்கு வராததைக் கண்டு அவரிடம் பணிபுரிந்த தொழிலாளர் இடம் விசாரித்தபோது, சங்கர் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இறந்த செய்தி தெரிந்தது. ஆனால் வணிக வளாகம் உரிமையாளரோ ஒப்பந்ததாரர்கள் யாரும் தெரிவிக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையாக கூறுகின்றனர். ஒரு சில அரசு அதிகாரிகள் சரியான முறையில் வளாகங்கள் கட்ட வசதி உள்ளதா என்று பாராமல் பில்டிங் கட்ட அனுமதி தருவது வேதனையளிக்கும் வகையில் உள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

Views: - 377

0

0