கொரோனா காலத்தில் கடனுதவி வழங்கிய நன்றி தெரிவித்த மோட்டார் வாகன பழுது பார்க்கும் சங்க தொழிலாளர்கள்
17 September 2020, 7:57 pmநீலகிரி: கொரோனா காலத்தில் நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் சங்க தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கியதற்காக அச்சங்கம் சார்பில் அதிமுக மாவட்டச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 24 முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை மூன்று மாதத்திற்கு முழுமையாக அறிவித்தது. ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்களின் அன்றாட பணிகள் பாதித்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வந்தனர். அச்சமயத்தில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் அ தி மு க கப்பச்சி வினோத் தலைமையில் வாழ்வாதாரத்தை இழந்த பல தொழிலாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டது . இதில் மோட்டார் வாகன பழுதுபார்க்கும் சங்க தொழிலாளர்களுக்கும் வங்கி கடன் வழங்கப்பட்டது இதனால் அவர்களின் வாழ்வாதாரம் சற்று நெருக்கடி இல்லாமல் இருந்தது.
இதற்கு தங்களது நன்றியை தெரிவிக்கும் வகையில் மோட்டார் வாகன பழுதுபார்க்கும் சங்க தொழிலாளர்கள் இன்று கப்பச்சி வினோத் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது இதில் நீலகிரி மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சகாயராஜ், செயலாளர் எட்வின், பொருளாளர் சுப்பிரமணி, மாநில பிரதிநிதி பியாரே ஜான், மற்றும் சிவா, தியாகு, சசிகுமார், மார்சல், வினோத்குமார், ராஜன், ஸ்டீபன், நாகராஜ், பிரபு, முபாரக், லுயீஸ், உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.