உலக வெறிநோய் தின சிறப்பு மருத்துவ முகாம்

28 September 2020, 5:38 pm
Quick Share

அரியலூர்; அரியலூரில் கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தின சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

செப்- 28 ஆம் தேதியான இன்று உலக வெறிநோய் தினம் கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்ட கால்நடை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமுகாம் நடைப்பெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ரத்னா செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டு தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட காவல்துறையில் உள்ள நான்கு மோப்ப நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் ஏராளமான பொதுமக்களும் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில் கால்நடைபராமரிப்பு துறை இணை இயக்குனர், உதவி இயக்குனர், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0