இந்திய தொல்லியல் துறை சார்பாக யோகா பயிற்சி

21 June 2021, 1:29 pm
Quick Share

வேலூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை பூங்காவில் இன்று இந்திய தொல்லியல் துறை சார்பாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று வேலூர் கோட்டை எதிரே உள்ள பூங்காவில் இந்திய தொல்லியல் துறை சார்பாக சென்னை வட்டார கண்காணிப்பாளர் விஜயகுமார் நாயர் யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். இந்த பயிற்சியில் வேலூர் பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கொரானா தொற்று பரவாத வகையில் சமூக இடைவெளியை பின்பற்றினர். இந்த யோகா பயிற்சியில் மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Views: - 379

0

0