நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.! ஆணையர் ஆஷா அஜித் தகவல்

2 March 2021, 2:34 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று ஆணையர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது .அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் ,சுவரொட்டிகள் அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல் சம்பந்தமான புகார்களை தங்களது செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து cVIJIL என்ற செயலி மூலம் அனுப்பலாம் . புகார் பதிவு செய்யப்பட்ட உடனே தங்களது புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விபரம் தங்களுக்கு தெரிவிக்கப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Views: - 1

0

0