நெல்லையில் தலை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் படுகொலை:மர்ம நபர்கள் வெறிச்செயல்

Author: Udhayakumar Raman
15 September 2021, 5:59 pm
Quick Share

நெல்லை: கோபாலசமுத்திரத்தில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாய பணிகளுக்கு இயந்திரம் அனுப்பும் பணி செய்து வருகிறார். வழக்கமாக அதிகாலையில் விவசாயபணிகளை மேற்கொள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு செல்வது மாரியப்பனது வழக்கம். அதன்படி வழக்கமாக செல்லும் கோபால சமுத்திரம் குளக்கரை வழியாக விவசாய பணிகளை செய்ய மாரியப்பன் சென்றபோது மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதில் தலை துண்டான நிலையில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து கொலை நடந்த இடத்திற்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதோடு, உடலை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொலையாளிகளை தேடி பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.

தலை துண்டித்து கொலையான மாரியப்பனின் தலை அருகே உள்ள காட்டுபகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் முன்னீர்பள்ளம் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்ததோடு முன்னிர்பள்ளம் பகுதியில் முகாமிட்டு தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று முன்தினம் நடந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 163

0

0