வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

8 September 2020, 8:49 pm
Quick Share

கரூர்: கரூரில் கேபிள் டிவி வரை பழுது பார்த்த போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் தனியார் கேபிள் டிவி செயல்பட்டு வருகிறது. இந்த கேபிள் டிவியில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பழனிச்சாமி என்பவர் மின்கம்பத்தில் வழியே செல்லும் கேபிள் டிவி வரை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்தில் இருந்த வயரில் இருந்து எதிர்பாராதவிதமாகா மின்சாரம் வாலிபர் உடலில் பாய்ந்தது வாலிபர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த வாலிபர் பழனிச்சாமி உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து திருப்பி தருவது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தான்தோன்றிமலை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

Views: - 0

0

0