கருங்குரங்கை கத்தியால் வெட்டிய இளைஞர்:வனத்துறையினர் விசாரணை

Author: kavin kumar
14 August 2021, 4:57 pm
Quick Share

நீலகிரி: உதகை அருகே அழிந்து வரும் பட்டியலில் இருந்து வரும் நீலகிரி கருங்குரங்கை ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உதகை அருகே மஞ்சன கொரை குடியிருப்பு பகுதியில் இன்று குடியிருப்பு பகுதிக்கு வெளியே கார்த்திக் என்னும் இளைஞர் வீட்டு வாசலில் கருங்குரங்கை கத்தியால் வெட்டியதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரது அருகில் செல்ல மிகவும் அச்சம் அடைந்தனர் பின்பு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினரை கண்டதும் குரங்கை வெட்டிய நபர் தப்பிச் சென்றார்.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் சற்று மனநலம் பாதித்த இந்த இளைஞரால் ஊருக்குள் நாள்தோறும் பிரச்சினை ஏற்படுவதாகவும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகமானது உடனடியாக மனநலம் பாதித்த இவரை மீட்டு காப்பகத்தில் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 250

0

0