கிணற்றை தூர் வாரி மரக்கன்றுகளை பராமரிக்கும் இளைஞர்கள்

12 July 2021, 4:31 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு அடுத்த பாடி கிராமத்தில், பழமையான கிணற்றை தூர் வாரி இரண்டாயிரம் மரக்கன்றுகளுக்கு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீர் விட்டு பராமரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்கிற பட்டதாரி இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து, பீனிக்ஸ் என்கிற அமைப்பை உருவக்கி அதே பகுதியில், குடிமராமத்து பணி செய்யப்பட்ட பாடி மற்றும் பூகானஹள்ளி ஏரியில் அத்தி, அரசன், பூவரசன், புங்கை, நாவல், வேம்பு உள்ளிட்ட இரண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தனர். கடந்தாண்டு வறட்சியினால் போதிய தண்ணீர் இல்லாததாலும் தண்ணீரை விலைக்கொடுத்து வாங்கி வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி வந்தனர். தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதால் செலவு அதிகமாகிறது.

இதனால், அந்த ஏரியில் மிகவும் பழமையான கிணறு ஒன்று பாழடைந்து பயன்படுத்தாமல் குப்பைகள் கொட்டி மூடப்பட்டது. இந்த கிணற்றை தூர் வாரி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட முடிவு செய்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சமூக வலையதலங்கள் மூலம் கிணற்றை தூர் வர உதவி செய்ய வேண்டும் என உதவிக்கேட்டிருந்தனர். இதனை பார்த்த தருமபுரி மாவட்டத்தை சோர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளனர். அந்த நிதியின் மூலம், சுமார் 40 அடியாக இருந்த கிணற்றை 65 அடி ஆழத்திற்கு தூர்வாரி உள்ளனர்.

அந்த கிணற்றில் தற்போது சுமார் 5 அடி வரை தண்ணீர் கிடைத்துள்ளது. அந்த தண்ணீரை மின்விசை பம்பு மூலம் இரண்டாயிரம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்தது வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவைக்காகாவும் இந்த கிணற்றின் நீரையே பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பராமரித்து வரும் மரங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் பசுமை காடுகளாக மாறிவிடும். இளைஞர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.

Views: - 113

1

0